இளமை காலம்
இளமை என்னும் தோட்டத்தில் இன்று பூத்த பூவாய் நீ..
இளமை காலமோ?
கல்லூரி காலமோ?
கனாக்கள் வந்து கதைகள் பேசும்..
கண்களும் காவியம் பேசும்..
காதலும் வந்து எட்டி பார்க்கும்..
புரியாத புதிராய்..
விடைகள் தேடுவாய்?
இளமை சிறிதொரு காலம்தான்..
புரிந்து விடு!
உணர்வுகளை வென்றுவிடு!
விடைகள் தேடு!
வாழ்வின் இலக்கை நோக்கி ஓடிவிடு!
வென்று விடு!
வெற்றியின் காலம்!
இளமை காலமே!!