நிலவும் அவளும்

உய்யாரமாய் நீலவானில் மிதந்துவந்த நிலவு
இரவின் நடு நிசியில் நதியின் மேல்வந்து
ஆழ்ந்த நதியின் பளிங்கு நீரில்
தன்முகம் கொஞ்சம் பார்த்தது அங்கு
கரையோரம் இன்னும் தலைவன் வருகைக்கு
காத்திருந்த அவள் முகம் பளிங்கு நீரில்
களங்கம் ஏதும் இல்லாது புது நிலவாய்
காட்சி தர அதைக்கண்டு நாணிய நிலவு
தன முகத்தின் மாசு கண்டு வெட்கி
ஓடி மறைந்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Nov-20, 7:52 pm)
Tanglish : nilavum avalum
பார்வை : 389

மேலே