மண் மணம் கமழும் மாவீரர்

மண் மணம் கமழும் மாவீரர் நினைவு...!
**********************************************
இனமானம் காத்திட்ட மாவீரனின் அன்பிற்கு..
ஈடுதான் எதுவே? இந்த தரணியில் .
விருப்பு வெறுப்பை தன்னில் அடக்கி.
நாடு உரைத்து போராட்டம் செய்து.
தற்காப்பு அரனாய் தாங்கிய காவலர்கள்
எங்கள் மானம் காக்க தங்களை இழந்தவர்கள். .
உணர்வினை புரிந்து உலகம் உறுதுணை நிற்குமே..!
வேதனையை விழுங்கி விழுதாய் நிற்கின்றோம்.. !
மண் மணம் கமழும் மாவீரர் நாளில் ...!
பலரின் பாசம் உங்கள் மேல் உள்ளதால் ..!
உங்கள் நினைவு அழையா விருந்தாளியாய்!
கண்களில் கண்ணீரை தந்து போகின்றன ..!
கவி அகிலன் ராஜா
கனடா

எழுதியவர் : கவி அகிலன் ராஜா (26-Nov-20, 7:20 pm)
பார்வை : 167

மேலே