உன் கன்னம் பிடிச்சு

பஞ்சு மிட்டாய் கன்னம் வைச்சு
பளபளணு நிறத்தை வைச்சு
அஞ்சுகம் போல் அழகான கண்மணியே
ஆர்ப்பரிக்கும் ஆசையை என்னுள் தூண்டரியே

கெத்தாக சுற்றி வந்தேன்
கேளிக்கையாய் பல பேசி வந்தேன்
அனைவரையும் அத்தையென்றேன் கண்மணியே
அழகாலே உன்னைச் சுற்றத் தூண்டரியே

மிட்டாசு மிடுக்கு உண்டு
மிடுக்காய் பல இடம் போவதுமுண்டு
பட்டாசு வெடியாய் இருந்தேன் கண்மணியே
பார்வையாலே பாடம் நடத்திக் கொல்லுரியே

நாள்தோறும் சுற்றி வந்தேன்
நகரம் எங்கும் தங்கி இருந்தேன்
நான் உன்னைக் கண்ட முதல் கண்மணியே
நாளுக்கு மும்முறை பார்க்கத் தூண்டரியே

கொத்தாக உன் கன்னம் பிடிச்சு
குதுகலமாய் உன் கூந்தல் முகர்ந்து
பித்தத்தோடே அணைக்க வேண்டும் கண்மணியே
ஒத்துக்கிட்டு உரிமை தருவது எப்படியோ.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Nov-20, 5:59 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : un kannam pidichu
பார்வை : 121

மேலே