என் ஆசான்

தம்பிஐயா என்றொரு ஆசிரியர்
தமிழ் பண்டிதராக எனக்கு அவர்
ஒன்பதாம் வகுப்பிலே அறிமுகமானார்
அவரை பார்த்தாலே எவர்க்கும்
அவரை பிடித்து விடும் அப்படியொரு
தோற்றம் பக்குவமான அவர்பேச்சு
மண்டையிலோ முடியில்லை
மிஞ்சிய மூளையுண்டு கொஞ்சமாகவே
சிரிப்பார் கெஞ்சினாலோ முறைப்பார்

எனக்கு தமிழ் பசி இருப்பது கண்டு
என்னை தட்டிக் கொடுத்த தனிப்பெரும்
ஜோதி அவர் என்னை கேலி
செய்ததில்லை ஏனென்றால்
என் எழுத்து குழந்தை என்பது
அவருக்கு நன்கு தெரியும் அதனால்
என்னை மெருகு படுத்தியவர்
எனக்கிருந்த கொஞ்ச பட்டுத்
திறமையை கண்டறிந்து என்னை
பாடவைத்த என் இனிய ஆசான்

முதல் கவிதை நான் எழுதிய போது
சில திருத்தம் செய்து என்னை
சீரமைத்து செதுக்கியவர்
பொறாமை கதை பேசி என்னை
புறம் தள்ளாமல் தட்டிக் கொடுத்து
என்னாலும் முடியும் என்கின்ற
நம்பிக்கையை என்னுள் விதைத்தவர்
அவர் கொடுத்த நம்பிக்கையை
என் பேனா நுனிக்குள் பெருமையோடு
புகுத்தினேன் பிறந்தன பல பல
வண்ண வண்ண கவிதைகள்

வானொலிக்கு எழுதினேன் சேர்த்து
சஞ்சிகைகளுக்கும் எழுதினேன்
அன்று அவர் அறிவுரை எனக்கு
இல்லாது போயிருந்தால் என்
எழுத்து குழந்தை எழுந்து நடமாடி
இருக்க முடியாது என் பெயரும்
வெளி உலகுக்கு தெரியாமல்
போயிருக்கும் நானும் தமிழின்
நயத்தை அறியாமலே போயிருப்பேன்
என் எழுத்துக்கு உயிர் கொடுத்த
தம்பிஐயா ஆசிரியரை வணங்குகிறேன்

எழுதியவர் : Ranjeni K (1-Dec-20, 2:21 am)
சேர்த்தது : Ranjeni K
Tanglish : en aasaan
பார்வை : 130

மேலே