மனித பேய்கள்

எல்லாருக்கும் எல்லாம்
இருந்தும்!
எதுவுமில்லை என்பவருக்கு
எதிலும் திருப்தில்லை!

இருப்பதை வைத்து
வாழ்பவர்க்கு!
இருமடங்கு இன்பம்!

இருப்பதை வைத்து
வாழ தெரியாதவர்க்கு!
இருமடங்கு துன்பம்!

இருப்பதை விட
இல்லாத பொருள் மீது தான்
ஆசை அதிகம்
மனிதனாய் பிறந்த
ஒவ்வொருவருக்கும்!

எவருக்கு எதை
கொடுக்க வேண்டுமென்று!
படைத்தவனுக்கு தெரியும்!

எவருக்கு எதை
கொடுத்தால் அது
மதிப்பு!

எவருக்கு எதை
கொடுத்தால் அது!
இழப்பு !

என்று எல்லாம்
அவனுக்கு
தெரியும்!

எந்த பொருள் மீது
ஆசை கொள்ளாதவர் உண்டா ?
எதை தேடியும்
அலையாதவர் உண்டா?

போதும் என்பவர்
உண்டா?
வேண்டாம் என்பவர்
உண்டா?

சில்லறை கூட
பகிர மனமில்லை!
கல்லறைகளை எப்படி
பகிர்ந்து கொள்வார்!

இந்த மனமில்லாத மனித
பேய்கள்!
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (1-Dec-20, 4:03 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : manitha peigal
பார்வை : 197

மேலே