முதுமொழிக் காஞ்சி 97

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
இன்பம் வேண்டுவோன் துன்பந் தண்டான். 7

- தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் இன்பத்தை விரும்பிய ஒருவன் தன் முயற்சியில் ஏற்படுந் துன்பத்தைத் துன்பமென்று தவிர்க்க மாட்டான்.

சுகமாக வாழ விரும்புவோர் அதற்குரிய முயற்சியில் உண்டாகும் மெய்வருத்தம் முதலிய துன்பங்களைப் பாராட்ட மாட்டார். தோட்டி போல் உழைத்துத் துரைபோல் சாப்பிட வேண்டும். துன்பத்துக்குப் பின்வாங்கினால் இன்பம் உண்டாகாது. .

'துன்புள தெனினன்றோ இன்புளது.' -இராமாயணம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-20, 8:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே