மறதி

கல்வி கற்கும்போது
பள்ளியில் படித்த
பாடங்கள் சிலது
மறந்துவிட்டால்
நினைத்த மதிப்பெண்
பெற முடியாது...!!

அதனால் "மறதி" யை
நினைத்து வருத்தமாக
இருக்கும்...!!

ஆனால்...
வாழ்க்கையென்னும்
பள்ளியில் கற்று கொண்ட
பாடங்கள் பலது
மறந்துவிட்டால்
அது மனதுக்கு
வருத்தமாகயில்லை...!!

மாறாக வாழ்க்கையில்
"மறதி" என்பது
பல நோய்களுக்கு
மருந்தாக மாறிவிடுகிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Dec-20, 11:49 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : maradhi
பார்வை : 238

மேலே