இளமை பெரிய கள் போதை

உணவென்று ஏந்துவோர் கைகளில்
உண்டென்று உணவை ஈவோரை
உலகின் தயாளன் என்றே போற்றும்
உயிர் படைத்த இறை .

விழுந்தால் உடையும் உடலை
வீரமாய் கொண்டுள்ள மனிதருக்கு
விட்டுடல் உயிர் பறந்தப்பின்
வித்தில்லா மலர் ஒத்தவர்.

பித்தம் மலம் கொழுப்பு
மொத்தமாய் கொண்டது உடல்
பலத்திற்காக புசிக்கும் உணவில்
இம்மூன்றுமே இருக்கும் முதன்மையாய்

நீர் காற்று பூமி நெருப்பு
இந்நான்கிற்கும் இல்லை மூப்பு
தோன்றியது முதல் குறைவின்றி
உலகை ஆள்வதே இவற்றின் சிறப்பு

இளமை பெரிய கள் போதை
பயிலல் பெரும் கடும் பாதை
முயலாமல் களியாடுதல் துயராக்கும்
பின்வரும் முதுமை வாழ்வை

கண்டுபிடிப்பால் எளிதாகும் எதுவும்
உண்டுபண்ணும் நம்முள் பெரிய சோம்பலை
எளிதாகும் செயலுக்கு ஈடாய் உழைப்பின்
எப்பொழுதும் நோயில்லை உடலுக்கு.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Dec-20, 7:02 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 159

மேலே