ஊராரே வளர்த்த காதல்

ஊராரே வளர்த்த காதல்

நேரிசை வெண்பா

அலர்மொழி யிவ்வூர் கலங்கா பரப்பி
விலகா வளரவிட்டார் நன்று -- அலராலெம்
காமம் வளரா சுருங்கி அழிந்திருக்கும்
தாமதம் நீங்கி யது

உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூட முடியாதென்றார் அது உண்மை
ஊராரின் கிசுகிசுப்பா லே எங்கள் காதல் வளர்ந்தது. இல்லையெனில் எங்கள் காதல்
சுருங்கி சுருண்டு போயிருக்கும்.

குறள் 4/7

.....

எழுதியவர் : பழனிராஜன் (13-Dec-20, 9:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 94

மேலே