மருத்துவ வெண்பா – கத்திரிக்காய் - பாடல் 84

நேரிசை வெண்பா

கத்திரிக்காய் பித்தங் கனன்றகபந் தீர்ந்துவிடுந்
தொத்து சொறிசிரங்கைத் தூண்டிவிடும் – மெத்தவுந்தான்
பிஞ்சான கத்திரிக்காய் பேசுமுத்தோ ஷம்போக்கும்
மஞ்சார் குழலே வழுத்து!

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

கத்திரிக்காய் பித்தத்தால் வந்த கபத்தை நீக்கும். புடையையும் கிரந்தியையும் அதிகப்படுத்தும். கத்திரிப் பிஞ்சானது திரிதோடத்தை விலக்கும்.

உபயோகிக்கும் முறை:

இதனை அடுத்தடுத்துச் சமைத்து உண்பவர்களுக்குக் கரப்பான் ரோகத்தை உண்டாக்கும். இரத்தக் கெடுதலினால் தேகத்தில் நமையுண்டானவர்கள் இதனைக் கொள்ளாதிருப்பதே நலம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Dec-20, 8:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே