மருத்துவ வெண்பா – கத்திரிப்பழம் - பாடல் 85

நேரிசை வெண்பா

பித்தங் கரப்பான் பெருங்கிரந்தி குஷ்டமிவை
மெத்தவுமாய் மெய்யிலழல் வீறுங்காண் – சத்தான
தாதுநட்ட மாங்கபங்காற் சார்ந்த சுவாசமும்போம்
ஓதுகத்தி ரிப்பழத்தால் உண்!

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

கத்திரிப்பழத்தினால் பித்தரோகம், கரப்பான், பெருவிரணம், குஷ்டம், தேக வெப்பம், சுக்கில‌ஷீணம் ஆகியவை உண்டாகும். கோழையும், வாத தோசமும், இரைப்பும் நீங்கும்.

உபயோகிக்கும் முறை:

இதனை உபயோகப்படுத்துவதனால் கபம், வாயு முதலியவை நீங்கினும் இதனாலுண்டாகுந் தீமைகள் அதிகம். ஆகையால், இது பெரும்பாலும் ஆகாரத்தில் நீக்கப்பட்டிருக்கிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Dec-20, 8:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

சிறந்த கட்டுரைகள்

மேலே