வீம்பு அல்ல
ஏற்றத் தாழ்வு இன்றி
இயல்பில் இதயத்தின்
இணை பிரியா ஓன்று
வளர்கின்றது அது எது/
அது அன்பில் வளர்வது
ஆழமறியா உள்ளத்தில்
வேர் ஊன்றி உவகையில்
பூத்துக் குலுங்கும்அந்த மலர்
எந்த மலரோ/ அதுவே
காதலெனும் காவியம்,
காதலிக்க நேரமில்லா எண்ணமில்லா
காவியும் கதை சொல்ல
கச்சிதமாய் கவர்ந்து கொள்ளும்
வாசம் மிக்க வர்ண மலர் இது,
இதற்கு வாய்ப்பில்லை விலகிக் கொள்ள
வித்தையில் சிக்க வைக்கும்
காதல் மலர்.
வீம்பு அல்ல விளையாட்டல்ல
வீரத்துடன் விளைந்து நிற்கும்
விண்ணைத் தொடும் எண்ணங்கள்
தந்து நின்று
வில்லையும் முறிக்க வைக்கும்
இந்த காதலெனும் அன்பு மலர்