ஆதி சிவம்

ஆதி சிவம்

நேரிசை வெண்பாக்கள்

ஆதி சிவனவன் பாதிமதி சூடிய
வேதநாய கத்தை யுணர்ந்துகண்டோம் -- பேதமாய்
ஜாதியிலா வாணெனவ னைக்கண்டு நாமறிந்தோம்
பாதியுடல் தந்தா னவன்


பித்தனென் பார்பார் பிறைசூட னென்பராம்
அத்தனென்பார் ஐய னவனென்பார் -- எத்தரும்
எத்தனை பக்தர் கெடுத்துமதம் மாற்றினார்
சொத்தை யதைவிட்டுத் தள்ளு

வேதத்தைக் கற்றுத் தெரிந்தவன் யாரடா
வேத விளக்கம் எவன்தருவான் -- சாதிப்பான்
வேத விளக்கம் அதுயிது வென்றுமூடர்
வேதம் கடலடா கேள்.



....

எழுதியவர் : பழனிராஜன் (15-Dec-20, 12:46 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 129

மேலே