செந்தமிழ் நாடு

சிறப்புகளால் ஆனது செந்தமிழ் நாடு
தேவர்கள் விரும்பும் செந்தமிழ் நாடு
பாரினுள் முதன்மையாய் செந்தமிழ் நாடு
பட்டறிவோர் நிறைந்தது செந்தமிழ் நாடு
பண்டிதரால் பாடல் பெற்றது செந்தமிழ் நாடு
அறவழியில் சிறந்தது செந்தமிழ் நாடு
ஆரியத்தை ஆதரித்தது செந்தமிழ் நாடு
இலக்கணத்தால் செழித்தது செந்தமிழ் நாடு
ஈதலை வலியுறுத்தியது செந்தமிழ் நாடு
உண்மையின் ஓர் வடிவம் செந்தமிழ் நாடு
ஊன்று கோளாய் பலருக்கு செந்தமிழ் நாடு
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் செந்தமிழ் நாடு
ஏகாந்த மொழியின் தாய் செந்தமிழ் நாடு
ஒளி மொழியின் ஆளுமை செந்தமிழ் நாடு
ஓதுவோரை உற்சாகமூட்டும் செந்தமிழ் நாடு
கதிரவனுக்கு முதற்பிள்ளை செந்தமிழ் நாடு
காலனுக்கு கட்டுப்படாதது செந்தமிழ் நாடு
கிழப்பருவம் அடையாதது செந்தமிழ் நாடு
கீதங்களை உருவாக்கிய செந்தமிழ் நாடு
குவலத்திலேயே முதல் மொழி பிறந்த செந்தமிழ் நாடு
கூறும் வார்த்தை வீரியம் கொண்ட செந்தமிழ் நாடு
கெடுமை அகற்றி பெருமை செய்யும் செந்தமிழ் நாடு
கேள்விகளை கேட்க ஊக்கமூட்டும் செந்தமிழ் நாடு
கொடுங்கோலை எதிர்த்து வென்ற செந்தமிழ் நாடு
கோயில் போல் அமைதியானது செந்தமிழ் நாடு
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Dec-20, 11:24 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : senthamizh naadu
பார்வை : 68

மேலே