முத்தக் குவியல்

என் இதழ்களில் மூட்டைக்கட்டி
முடிந்து வைத்திருந்த
முத்தக் குவியலை
இறக்கி வைக்க இடம் தேடி
உன் தேன் தேகமெங்கும்
சுற்றி அலைந்தேன்

அவ்வாறு அலையும் போது
போட்டு வைக்கப்பட்டிருந்த முடிச்சானது
சின்னதாய் அவிழிந்து முத்தமானது
உன் தேகம் முழுவதும்
கொஞ்சமாய் கொட்டி சிதறியது

சிதறிய முத்தங்களை அள்ள மனமின்றி
மீதமுள்ள முத்தங்களை
உன் முதுகுத்தண்டில்
மொத்தமாய் இறக்கி வைத்து விட்டு
பெரும் மூச்சு விட்டேன்!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 5:48 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : muthak kuviyal
பார்வை : 2614

மேலே