நீ மட்டும் போதும்

எனக்கொன்றும்
பெரிதாய் ஆசைகள் எதுவும் இல்லை!
என் அருகில் அகிலமாய்
நீயிருந்தால் போதும்...


எனக்கொன்றும் பெரிதாய்
தேவைகள் ஏதும் இல்லை!
தினமும் உன் தேனிதழ் முத்தம் போதும்...


எனக்கொன்றும் பெரிதாய்
கவலைகள் ஏதுமில்லை!
கட்டியணைத்து காதல் செய்ய
என் கண்மணி நீயிருந்தால் போதும்...


எனக்கொன்றும் பெரிதாய்
வெற்றிகள் தேவையில்லை!
உன்னோடு தினம் இரவில்
கட்டில் மேல் தோற்றால் போதும்...


எனக்கொன்றும் பெரிதாய்
வலிகள் ஒன்றுமில்லை!
மருந்தாய் உன் விழிகள்
என்னிடம் பேசி சிரித்தால் போதும்...


எனக்கொன்றும் பெரிதாய்
உறவுகள் யாரும் தேவையில்லை!
உயிராய் நீ உடனிருந்தால் போதும்...


பெண்ணே!
நேசிக்க "நீ" இருக்கும் வரை
சுவாசிக்க காற்றொன்று தேவையில்லை...


கண்ணே!
"நீ" போதும்
"நீ" மட்டும் போதும்
வேறென்ன தோன்றும்!!!


கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 6:11 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : nee mattum pothum
பார்வை : 461

மேலே