என் கற்பனையாய் அவள்
என் கண்மணியை காண வந்தேன்
•
•
கட்டியணைத்தாள்!
கையளவு இதயத்தினுள் இருந்த
கடலளவு பாரம்
கடுகளவாக குறைந்து!!!
•
•
கட்டியணைத்ததற்கு கைமாறாக
அவள் நெற்றி பற்றி முத்தமிட்டேன்..
மங்கையவள் மயங்கி
என் நெஞ்சின் மீது சாய்ந்து
சில நிமிடம் துயில் கொண்டாள்...
•
•
நான் மதி இழந்து
நின்று கொண்டிருந்தேன்!
விழி அயர்ந்து உறங்கும்
அவள் மஞ்சள் முகம் கண்டு!!
•
•
அவள் கண்விழித்து
பூவிதழ் விரித்து
கன்னத்து முத்தமொன்றுயிட்டாள்!
கடுகளவு இருந்த இன்பம்
கடலளவாய் நெஞ்சில் நிறைந்தது..
காலத்திற்கும் அழியாத
ஒரு சுவடாய் பதிந்தது..
•
•
அவள் காதோரம் இரகசியம்
ஒன்று சொன்னேன்!?!?
•
•
(அது என்ன இரகசியமாக இருக்கும்
என்று யோசிப்பதை விட்டுவிட்டு
அடுத்த வரிகளை படியுங்கள்
ஏனென்றால்,
நான் இரகசியம் காப்பவன்)😜
•
•
அந்த இரகசியத்திற்கு
ஆயிரம் வார்த்தைகள்
கோர்த்து பதில் சொல்லத் துடித்தாள்...
•
•
ஆனால் இதழ் தாண்டி
ஒரு வார்த்தை கூட வரவில்லை என்று
அவள் தவியாய்த் தவித்தாள்...
•
•
அவள் இதழ் சொல்லத் துடித்த
வார்த்தைகளை எல்லாம்
என் இதயம் புரிந்து கொண்டது!
அவள் விழி மொழியால்
தெரிந்துகொண்டது!
•
•
நீ பதில் சொல்லத் தேவையில்லை
என்று வாயடைத்து..
அவள் அழகு முகமெங்கும்
இதழ் பதித்து..
இறுக அணைத்துக் கொண்டேன்!
என் இறுதி மூச்சு இருக்கும் வரை
அவளின் இறுக்கம்
என் இதயத்திற்கு வேண்டுமென்று
எனக்குள் நானே
நினைத்துக் கொண்டேன்!!
•
•
என் நிஜத்தில்
ஓர் கற்பனையாய் "அவள்"
•
•
#காதலிசம்
•
•
கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான் ❤️