அவளின் கயல்விழி
இதுநாள்வரை
நான் முத்தமிட முடியாமல் தவித்த
பாகத்தை தீண்டி முத்தமிட
ஒரு துகளாக உருமாறி
காற்றோடு விளையாடி
அவள் கயல்விழியில் வந்து
விழுந்துவிட்டேன்...
கருமை நிலவினில்
என் காலடித் தடத்தையும் பதித்துவிட்டேன்...
மூச்சிப்பிடித்து மூன்னூறு கோடி
முத்தமும் கொடுத்துவிட்டேன்...
•
•
காற்றின் உதவியோடு
அவள் விழி வந்து விழுந்த எனக்கு
ஏனோ வெளி வர வழி தெரியவில்லை!
உதவிசெய்ய யாருமில்லை!
•
•
என்ன செய்வதென்று புரியாமல்
அவள் கருவிழியின் நடுவில்
என் பெயர் எழுதிக் கொண்டிருந்தேன்..!
•
•
நான் முத்தமிட்ட போது உருவாகிய
ஈர எச்சில் எல்லாம் ஒருசேர்ந்து
ஒரு துளி நீராக வழிந்தோட
அதனோடு நானும் நீந்தி
வெளிவரும் வேளையில்
அவள் விரல் கொண்டு
என்னை மீட்டெடுத்தாள்!!!
•
•
வரலாற்றுப் பக்கத்தில் எழுதுங்கள்!
வெண்ணிலவில் கால் பதித்தவன்
நீல்ஆம்ஸ்ட்ராங் என்றால்..
கருமை நிலவினில் கால் பதித்தவன்
•
•
கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️ என்று.