தேவதையும் தேன்மிட்டாயும்

தேவதை தேன்மிட்டாய்
சாப்பிடும் என்று யாரேனும்
கேள்விப்பட்டதுண்டா?


நான் கேள்விப்படவில்லை..
நேரில் அமர்ந்து பார்த்தேவிட்டேன்!!


அவள் சுவைத்து சாப்பிடும் போது
அங்கும் இங்கும் அசையும்
அவள் இதழழகை காண
என் விழிகள்
என்ன பாக்கியம் செய்திருந்ததோ?!?!


என்ன தவம் செய்திருந்ததோ!?!?
அந்த மிட்டாய்..
அவள் பூப்போன்ற இதழில்
தேன் வந்து தீண்டிய பின்பு தான்
அப்பெயர் முழுமை பெற்றது
"தேன்மிட்டாய்"...!


தான் தேவதை என்பதை
முற்றிலும் மறந்து..
முக்கால் மணி நேரம்
என்னுடன் இருந்து..
சிரித்துப் பேசி மகிழிந்தாள்..
என் மனம் முழுவதும் நிறைந்தாள்..
நீங்கா நினைவுகளாய்
என் உயிரினுள் பதிந்தாள்..!


தேவதையுடன் நான் இருந்தேன்
என்பதற்கு சாட்சியாக அவளிடம்
ஒரு Selfiee எடுக்க சொல்லிக் கேட்டேன்..


அதற்கு தேவதை
என் தேவை ஒன்றை
நீ நிறைவு செய்தால்
நான் உன்னுடன் Selfie
எடுத்துக் கொள்கிறேன் என்றாள்...!


எதைக் கேட்கப் போகிறாள் என்று
நான் உள்ளுக்குள் பயம் கொண்டேன்..


இந்த உலகை உருட்டி
என் கையில் கொடு என்பாளோ?


ஒருவேளை
என்னைப்பற்றி உருகி உருகி
கவிதை ஒன்று எழுதி கொடு என்பாளோ?


என்று எனக்குள் நானே
நினைத்துக் கொண்டேன்?!?!


ஆனால் அவளோ
என்னை தூக்கி
உப்புமூட்டை சுமக்க வேண்டும் என்றாள்


அவளை முதுகில்
ஏற்றிக்கொண்டு சுமந்த
அந்த சில நொடி
இந்த உலகமே
என் பின்னால் நின்றது
போல் தோன்றியது..!


ஒரு இறகை விடவும்
எடை கம்மியாக இருந்தாள்
ஏனென்றால் அவள் தேவதையல்லவா!!!


தூக்கிய அவளை
இறக்கி விட்டுவிட்டு
Selfie எடு என்றேன்
சிரித்துக் கொண்டு
அதெல்லாம் முடியாது என்றாள்...


அன்று தான் தெரிந்து கொண்டேன்
தேவதைகளும் பொய் சொல்லுமென்று..


இன்று அழகு கம்மியாக இருக்கிறேன்
Selfie வேண்டாம் என்று புலம்பிய
அவளுக்கு தெரியாது
நான் அவளை
என் கண்களால் படமெடுத்து
இதயத்தில் மாட்டிக்கொண்டேன் என்று...


விடைபெறும் நேரத்தில்
அவள் அன்போடு அணைத்த
அணைப்பிற்கு ஆயுள் முழுவதும்
என் உயிர் அவள் பெயர் சொல்லி
உச்சரித்துக் கொண்டே இருக்கும்!!!


அத்தேவதை அருகினில் அமர்ந்து
அழகினில் மெய்மறந்து
சிரிப்பினில் விழுந்த நான்
எழ மனமில்லாமல் எழுந்து வந்தேன்..


உனைக்காண
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமென்று
என்னை நானே தேற்றிக்கொண்டேன்..


அவள் இதழ் தொட்ட குசியில்
"தேன்மிட்டாயும்"
அவள் உள்ளம் தொட்ட உற்சாகத்தில்
"நானும்".


கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 6:01 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 3214

மேலே