என் காதல் போதும்

மழை பிடிக்கும்!
நனைந்து கொள்ள ஆசையிருக்கும்!
ஆனால் தூரம் நின்று ரசிக்கும்
நம் மனம் போல தான் என்னுயிரும்..
அவளை பிடிக்கும்!
என் காதல் சொல்ல ஆசையிருந்தும்!
தினம் தினம்
தொலைவினில் நின்று
ரசித்துவிட்டுச் செல்கிறேன்..
என்னுள்ளேயே என் காதலை
புதைத்துவிட்டு புன்னகைக்கிறேன்..
என் காதல் எனக்கு போதுமென்று!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 6:14 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : en kaadhal pothum
பார்வை : 242

மேலே