மருத்துவ வெண்பா – செவ்வாழைப்பழம் - பாடல் 91
நேரிசை வெண்பா
மந்தங் கதித்திடுமே வாயினிக்கத் தின்றார்க்கு
விந்தூறும் மெய்யிறுகும் மேதினீல் – தொந்தமுறும்
எவ்வாத ரோகிக்கும் ஏற்கா தெனவகுத்த
செவ்வாழையின் கனியின் சீர்!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
செவ்வாழையின் கனி உண்பதற்கு அதிக ருசியாக இருக்கும். அக்கினி மந்தத்தையும், விந்து சரீரம் முதலியவற்றிற்குப் பலத்தைக் கொடுக்கும். வாத ரோகிகளுக்கு உதவாது.