நீராம்பல்♥️

நீராம்பல்♥️

கதிரவன் வர
நீ மலர்திடுவாய்
நான் வர
அவள் சிரித்திடுவாள்
சேற்றில் பிறந்த செந்தாமரையே
வறுமையில் பிறந்த என் தாமரையே
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
தண்ணீரில் வாழ்க்கை
கண்கள் அது காதலிக்க
மனம் தினம் பேதலிக்க
எங்கள் காதல் வாழ்க்கை
புத்தனை ஈர்த்த மலரே
என்னை கவர்ந்த மங்கையே
ஞானியின் குறியீடே
இந்த ஞாயஸ்தனின் இருப்பிடமே
வண்டுகளின் வாழ்விடமே
என் வாலிபத்தின் வாசலே
ஆகாய தாமரை பல இருந்தும்
தனித்துவம் வாய்ந்த நீர்ஆம்பலே
என் நட்பாக பல மங்கையர்கள்
இருக்க நீ மட்டும் உள்ளம் கவர்ந்த காதலியாக
தேசத்தின் அடையாள பூ
என் தேகத்தின் மோக பூ
நிலவின் வரவில் இதழ் குவிப்பாய்
நான் வருகையில் அவளும் அவள்
இதழ் குவிப்பாள்
நான் தேன் பருக.

- பாலு.

எழுதியவர் : பாலு (19-Dec-20, 8:54 pm)
சேர்த்தது : balu
பார்வை : 272

மேலே