காதலின் வலி கொடியது

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

பெண்ணே
என் கண்ணே ...!

பொழிறதே! பொழிகிறதே!
உந்தன் ஞாபகமழை பொழிகிறது கரைகிறதே! கரைகிறதே!
எந்தன் நெஞ்சம் அதில் கரைகிறதே!

தவிக்கிறதே! தவிக்கிறதே!
உன்னை காண கண்கள் தவிக்கிறதே துடிக்கிறதே! துடிக்கிறதே!
உன்னை சேர என்னுயிர் துடிக்கிறதே!

வடிக்கிறதே! வடிக்கிறதே!
என் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே!
அதில் தெரிகிறதே! தெரிகிறதே!
உந்தன் பிம்பம் தெரிகிறதே!

கொல்கிறதே! கொல்கிறதே!
உன் வெறுப்பு என்னை கொல்கிறதே! வலிகிறதே! வலிகிறதே!
இதயம் அதனால் வலிக்கிறதே!

சுடுகிறதே! சுடுகிறதே!
இரவும் நிலவும் சுடுகிறதே!
மறுக்கிறதே மறுக்கிறது
உணவும் உறக்கமும் மறுக்கிறதே!

போகிறதே! போகிறதே!
என்னை விட்டு வாழ்க்கை போகிறதே!
வெறுக்கிறதே! வெறுக்கிறதே!
இந்த உலகத்தை மனம் வெறுக்கிறதே!


*கவிதை ரசிகன்*

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

எழுதியவர் : கவிதை ரசிகன் (27-Dec-20, 9:47 pm)
பார்வை : 546

மேலே