இரவெல்லாம் கண் விழித்திருந்தேன் உனக்காக 555

***இரவெல்லாம் கண் விழித்திருந்தேன் உனக்காக 555 ***


என்னுயிரே...


உன்னை முதன் முதலில்
கண்ட நாள் முதல்...

இரவெல்லாம் உறக்கமில்லை
உன்னையே நினைத்துக்கொண்டு...

நாம் பழகிய நாட்களில்
சந்திக்கும் நிமிடத்திற்காக...

இரவெல்லாம்
கண் விழித்திருந்தேன்...

உறங்கினால் மணித்துளிகள்
நகர்ந்துவிடுமோ என்று...

இனி நம் சந்திப்புகள்
நிகழப்போவதில்லையடி...

ஊரோடு ஒன்றுகூடி நானும்
உறங்க நினைத்தேன்...

உன் நினைவுகள் என்னை
உறங்கவிடுவதில்லை...

உன்னை மறக்கும் அந்த நாள்
என் வாழ்வின் இறுதிநாளோ...

அச்சம் கொள்ளுதடி
என் பூ உள்ளம்...

உன்னையும் உறக்கத்தையும்
தொலைத்துவிட்டு...

உணர்வின்றி உலா வருகிறேன்
பூமியில் நானும் தினம்.....***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (27-Dec-20, 5:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1046

மேலே