மறையாத வடுக்கள் மறைந்த ஆண்டில் 💔💔

👉 ....மறையாத வடுக்கள்....👈

என்னவென்று சொல்லுவது?
எதையென்று எழுதுவது?
அத்தனை துயரங்கள்- இறைவன்
அத்'துணை' இருந்தும்
கடந்து வந்த இந்த வருடம்..!!

எப்பொழுதும் போல் தான்
பல கனவுகளுடன்
பிறந்தது இந்த 2020 ..👈
ஆனால் அடுத்து அடுத்து
எடுத்து வந்த மர்மங்களால்
நாம் வீட்டில் அடைக்கப்பட்டோம்
நம்மை "காப்பான்"
ஆலயத்தில் அடைக்கப்பட்டான்..!!!

கனவிலும் நினைத்திடாத
நிகழ்வுகள்
கண் முன் கொண்டு வந்தது..
கானல் நீர்தான் நம் மனித
வாழ்வென உணரவைத்தது...😇

மீள முடியாத
துயரங்கள்...
மீண்டிடாத
பிரிவுகள்...
கண்டிடாத
வலிகள்..
மறைந்திடாத
வடுக்கள்...
அத்தனையும்
மொத்தமாக கொட்டியது
இந்த ஆண்டு புவி மீது...😟

வருடத்தின் முடிவு வரை
நாம் வாழ்ந்து விட்டோம்
என்பதே ஆகச்சிறந்த
சாதனையாகிப் போனது..!!
மரணத்தின் விளிம்பு வரை
சென்று திரும்பிய பல உள்ளங்களை
மனிதர்களாக மாற்றிச் சென்றது..!!

பணம் இல்லாமலும்
பதவி(வேலை) இல்லாமலும்
வாழ கற்றுதந்தது...
சிக்கனம் என்ற சொல்லின்
மகிமையை மனதில் விதைத்து...👍

கொடுத்தவனை
கேட்கவைத்தது...🕍
கேட்டவனை
கொடுக்கவைத்து..🧘

இறை என்பது
-கண்ணுக்கு- தெரியாத சக்தி
அது நம்மை தீண்டாமல்
காக்கவும் செய்யும்...!!
நாம் நம் வரைமுறை
மீறினால் நம்மை தீண்டி
அழிக்கவும் செய்யும்
என உணர்த்தியது...!!

கண்ட 'வலியில் '
இருந்து
செல்லும் 'வழியை'
கற்று கொண்டால்...
தெளிவில்லாத எந்த
நெஞ்சும் தெளியும்
மறையாத எந்த
வடுவும் வாடும்...!!👈

இதை மனதில் நிறுத்தி
நடக்க தொடங்கினால்
வரும் ஆண்டு
வரும் துயரம் கூட
நம்மைக் கண்டு
நடுங்கும்,
துணிந்த மனதிற்கு
பூச்சு செண்டு
அளித்து வணங்கும்..🙏

எண்ணம் போல் வாழ்வு👌
நல்லதை எண்ணுவோம்
பிறருக்கு
நல்லது செய்ய எண்ணுவோம்
நேர்மறையாக எண்ணுவோம்
நேர்மையுடன் எண்ணுவோம்..👍

எண்ணித்துணிந்தால்
வரும் வருடம் மட்டுமல்ல
எந்த ஒரு வருடமும் இனிதே...

இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துக்கள்🎉🎊🌹💥💝

என்றும்..என்றென்றும்..
ஜீவன்❣️

எழுதியவர் : ஜீவன் (31-Dec-20, 6:30 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 163

மேலே