பசுமை
பசுமைப் புல்வெளி பசுமை நெல்வயல்
பசுமை மாந்தோப்பு பசுமை பூந்தோட்டம்
பசுமைக் கொஞ்சும் கிளிக் கூட்டம்
பசுமை மரங்கள் அடர்ந்த கானகம்
பசுமை கொஞ்சிபேசிப் போகும் இளம்
நங்கையர்க் கூட்டம் பசுமை கருமேகம்
கண்டு தொகை விரித்து நடனமாடும்
மையில் கூட்டம் பசுமை மனதில்
பதிந்திடும் நல்லவையே கூட்டும் எண்ணங்கள்
பசுமை நல்லோர்கள் சகவாசம் என்றுமே
பசுமை நல்லவர் தோழமை நட்பு
பசுமை இறைவன் திருவடிகள் நமக்கு