காலத்தின் கணக்கு

இறைவன் யாருக்கு
எதை விதித்துள்ளான்
என்பது
அவனுக்கு மட்டுமே
தெரிந்த கணக்கு...!!

யாரும் எளிதில்
அறிந்து கொள்ள இயலாது..!!

பிறகு..
ஜோதிடம், ஜாதகம் என்று
சொல்வது எல்லாம்
கட்டு கதைகளா..!! ??

என்ற கேள்வி நம் முன்னே
விஸ்வரூமா நிற்கிறது....!!

உண்மைதான்
மறுத்து பேச இயலாது
ஆனால்..
யாவுமே
காலத்தின் கணக்கு
இறைவனுக்கு மட்டுமே
தெரிந்த விடை ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Jan-21, 1:18 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaalaththin kanakku
பார்வை : 167

மேலே