உயிர் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து
அன்பின் அடையாளமாய்
நட்பின் திருவுருவமாய்
இன்றைய நாளில் இப்பூவுலகில் அவதரித்த
புன்னகை பூட்டிய நட்பின் நாயகியே
உன் வாழ்க்கை வானவில் போன்று வண்ணங்கள் நிறைந்ததாகவும்
செல்வங்கள் நிறைந்ததாகவும் இருக்கட்டும்
உன் திறமையால் நீ புகழின் உச்சம் அடைந்து
உன் வாழ்வில் புன்னகை மலரவும்
பல சாதனைகள் படைத்து-உன்
பெயர் சரித்திரத்தில் இடம்பெறவும்
பாசத்தோடும் பண்போடும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்