உந்தன் கண்ணழகு
கண்ணே உந்தன் கண்களின் அழகில்
என்னை மறந்து லயித்திருந்த போது
என்கண்முன்னே மானும் மயிலும்
கயலும் கெண்டையும் தோன்ற இவை
ஒன்றும் உந்தன் கண்களின் அழகிற்கு
ஒப்பாகா பின் எப்படித்தான் வருணிப்பேன்
உந்தன் கண்ணழகை என்று எண்ணியபோது
என்கண்முன்னே அழகாய் இதழ்கள்
விரித்து மலர்ந்தது செந்தாமரைப்பூ உந்தன்
அழகிய விரி விழிகளை அதில் கண்டேன் நான்