உன் மடியில் தாலாட்டு பாடடி எனக்கு 555

***உன் மடியில் தாலாட்டு பாடடி எனக்கு 555 ***
ப்ரியமானவளே...
நீரோடை கரையினிலே
கோரை புல்லின் நடுவிலே...
உனக்காக
நான் காத்திருந்தேன்...
தென்றலையும் தண்டி
சுட்டது
காலை கதிரவன் ஓளி...
காலை கதிரவன் ஓளி...
என் மேனி எங்கும்
நனைந்தது வியர்வையில்...
தென்றலுக்கு போட்டியாக
தாவணியில் விசிறி வந்தாய்...
மூக்குத்தி அணியாத
உன் முகத்தில்...
வைரக்கல்லாய் மின்னியது
வியர்வை துளி...
நீ மூடி மறைத்த
உன் கோபுர அழகை...
மேலும்
அழகாக காட்டியது...
வியர்வையில்
நனைந்த உன் ஆடை...
என்
முகத்தின் வியர்வையை...
முத்தென்று
தாவணியால்
துடைத்தாய்...
துடைத்தாய்...
உன் மூக்கின் மேல் வைரமென்று
நான் இதழ்கள் பதித்தேன்...
கோரை புல்லின்
கற்பூர வாசனையும்...
உன் மேனியின்
சந்தன வாசனையும்...
உன் இதழ்களில் என் இதழ்கள்
பாதிக்க தூண்டுதடி...
தொடக்கம் உன்னில் இருந்தா
என்னில் இருந்தா ...
சொல்லடி
என் கண்ணே...
உன்
மடியில்
தலைசாய்க்க...
தலைசாய்க்க...
உன் தாவணியில்
எனக்கு
குடைபிடிக்க வேண்டுமடி.....