கண்ணழகி அவள்

என்னவளை பார்த்து நான்' கண்ணே
கண்ணே கண்ணே கண்ணே கண்ணம்மா'
என்று சொல்லி மேலும் ஒன்றும் சொல்லாது
நிற்க அவள் கேட்டாள். ' என்ன இன்னும்
ஒன்றும் சொல்லாது நின்றுவிடீங்க' என்றாள் அதற்கு
நான் சொன்னேன்' உந்தன் கண்களின்
சொல்லொணா அழகின் மயக்கத்தில் நான்.....
கள்ளுண்டவன்போல் நிற்கின்றேனடி
உன் கண்ணின் அழகையே உந்தன் உடல்
எல்லாம் கண்டு என்றேன்..... சிரித்து அவள்
புள்ளி மானென துள்ளி ஓடினாள் மான்விழியாள்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jan-21, 6:44 pm)
Tanglish : kannalagi aval
பார்வை : 206

மேலே