இரவெல்லாம் என் விழியோரம் ஈரம் 555

***இரவெல்லாம் என் விழியோரம் ஈரம் 555 ***


ப்ரியமானவளே...


உனக்காக தினம் ஒவ்வொரு
மணி துளிகளும் காத்திருந்தேன்...

உன் அழைப்புகளுக்கும்
உன் குறுந்செய்திகளுக்கும்...

உன்னை காணும்
நாள் வந்தாலே...

இரவெல்லாம் உறங்காமல்
நிமிடங்களை நகர்த்திக்கொண்டே...

காலையில் உன்னிடம்
என்ன பேசலாமென்று...

ஒத்திகை பார்ப்பதிலே
மணித்துளிகளும் இரவும் கரையும்...

காதலெனும் இன்பத்தை
நீ தந்தாய்...

காதலெனும் தித்திப்பை
நான் கொடுத்தேன்...

அளவுக்கு அதிகமாக
தித்திப்பு திகட்டும் என்பார்கள்...

என் காதலும்
உனக்கு திகட்டிவிட்டதால்...

நீயும்
என்னை பிரிந்தாயோ...

உன்னையும் நீ கொடுத்த
வலிகளையும் மறந்து...

உறங்க நினைத்தேன்...

என்னை உறங்க விடுவதில்லை
உன் அழகிய நினைவுகள்...

இரவெல்லாம் என்
விழியோரம் ஈரம் கசிவதால்.....



***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (12-Jan-21, 9:10 pm)
பார்வை : 1326

மேலே