நினைவில் உன்னை சுமந்து கொள்கிறேன் 555

***நினைவில் உன்னை சுமந்து கொள்கிறேன் 555 ***


என்னுயிரே...


விண்மீன்கள் கூட்டம்
விண்ணில் ஜொலிக்க...

முழுமதி
பூமியெங்கும் ஒளிவீச...

மின்மினி பூச்சிகள்
என்னை
சுற்
றி வட்டமிட...

இளந்தென்றலில் மிதந்து
வந்தது உன் வாசம்...

யானைவரும் பின்னே
மணியோசை வருமுன்னே...

உன்
வருகைக்கு முன்...

உன் வாசம் என்னை
தழுவி சொன்னதடி...

உனக்காக உன்னவள் வந்து
கொண்டு இருக்கிறாள் என்று...

விண்மீன்களுக்கு போட்டியாக
உன் முகத்தில் இருவிண்மீன்கள்...


சாயம் பூசாத உன்
செவ்விதழ்கள் மின்ன...

என்னோடு அனைத்துகொண்டேன்
கண்டதும் உன்னை...

தென்றலும் நம்மை
தாண்டி செல்லாமல்...

இன்று அயல் நாட்டில்
முழுமதியை
காணு
ம் போதெல்லாம்...

நினைவில் உன்னை
சுமந்து கொள்கிறேன்...

என் தனிமையில்
எனக்கு துணையாக.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (4-Jan-21, 5:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 904

மேலே