வண்ணம் -112
வண்ணம் - 112
****************
தந்தன தானன தனதான
தந்தன தானன தனதான
அந்தமி ழேயிதழ் வழியாக
அஞ்சுக மாயவள் மொழிபேச
உந்திடு மாசையில் மனமோடி
ஒண்டொடி யாளுட னுறவாடும்
சந்தன மாலையின் மணமாகச்
சந்ததம் பாடலி லவள்வாசம்
வந்தன ளோவிய மதுபோலும்
வஞ்சியி னாடலில் மகிழ்வேனே !!
சியாமளா ராஜசேகர்