அம்மாவிடம் பிச்சை

அன்னையின் கருனையில்
அன்பின் எல்லைக்கு ஈடாகுமா?
ஆயிர உறவுகள் நம்மிடம் இருந்தாலும்
அம்மாவை போல் நாம்
காணமுடியுமா?
யாரிடமும் சொல்லாமல்
இடுப்பு வலி பொருத்த
அம்மாவின் பொருமைக்கு இணையாகுமா?
புறந்தள்ளி பெற்ற நம்மை
காணும் போது சிறு துளி
கண்ணீர்க்கு இணைசொல்ல முடியுமா?
ஏக்க மூச்சு விட்டு தன்னை
கரத்தில் ஈந்தும் அன்னைக்கு
நூறு சாமி இணைசொல்லமுடியுமா?
ஏதேதோ ஆசை
நெஞ்சில் சுமந்தாயோ
எனை காண கண்டதும் என்ன
நினைத்தாயோ?
சிவப்பா பிள்ளை இருக்கிறத
பார்த்து சிரித்தாயோ?சிந்தித்தாயோ?
நிச்சயமா! என் மகன் தான் சாமி
என்னை பார்த்த நீ வரம் தந்த
குலசாமி ஊரேங்கும் சொல்லிரியே
உனை பார்த்து ஊர்மெச்ச வைக்கிறியே!

ஆராராரோ நீ பாடி
அன்போடு மடியில் தாய்ப்பாலை
ஊட்டி தூங்க வைத்தாயே
அதற்கு நிகர் எங்கு போயி சொல்ல
இமயமலை உனக்கு ஈடுடாகுமா?

ஏவரெஸ்ட் ஒன் பேர் சொல்லுமா?

என்றும் நீ இருக்க தவமாய்
இருக்கிறேன்......

உன்னோட உயீரை என்
உயீர் வரைக்கும் பிச்சை
கேட்கிறேன்.......!

எழுதியவர் : கவிஞன் செந்தமிழ் புலவன் (12-Jan-21, 10:49 pm)
சேர்த்தது : செந்தமிழ் புலவன்
Tanglish : ammavidam pitchai
பார்வை : 136

மேலே