பரதன்

நேசமான நண்பன்
பாசமுள்ள பரதனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

எனது நட்பு ராஜாங்கப் பரப்பு
விரிவடைய நீயும் ஒரு காரணம்...
பாரதப் பெரு நாட்டின்
தென் கடைக்கோடியில் பரதன்
நீ இருப்பதால்...

இருளப்பபுரம் உன் ஸ்தலம்...
ஒளிமயமானது உன் உள்ளம்...
அதில் உண்டு அன்பு வெள்ளம்...

இறைவன் வழங்கிய மனதை
எப்படியெல்லாம் உபயோகிக்க
வேண்டுமோ அப்படியெல்லாம்
உபயோகிப்பவன் நீ... அதனால்
வாழும் பொழுதுகள் உன் வசம்...
இங்கு நான் சொல்வது நெசம்...

சுகமான சிந்தனைகளில்
சுற்றுலா போகும் நண்பன் நீ
வானமும் வசந்தமும் வசப்பட
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Jan-21, 2:55 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : parthan
பார்வை : 142

மேலே