முகநூல் பதிவு 256

17 .1 .2020

வழக்கமாக புத்தகக் கண்காட்சிக்கு யாரோ ஒருவர் துணையுடன் தான் செல்வேன் ..... இந்தமுறை யாரையும் அழைக்கக்கூட நேரமில்லை ..... தனியாகத்தான் சென்றேன்..... நுழைவாயிலை அடையும் போதே இன்ப அதிர்ச்சி .... சகோதரி வேதாம்மா மற்றும் கோபாலன் ஐயா தம்பதி சகிதமாய் நிற்பதைக் கண்டு ..... பார்த்தவுடன் ஒரு பரவசத்துடன் அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டார்..... வெளியில் தான் பிராபா(அவர்களின் நட்பின் உரிமையில்) நிற்கிறார் என்று காட்டினார்.... ஆஹா.... நம்ம பட்டுக்கோட்டை பிரபாகர் சார்..... 2016ல் எந்த அறிமுகமும் இல்லாதபோது.... ஒரு புதிய எழுத்தாளர் என்றுகூட பார்க்காமல் .... அழைத்தவுடன், என் “அகச் சுவடுகள்” என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டிற்கு வந்து சிறந்ததொரு சொற்பொழிவு ஆற்றியவர்..... கைப்பேசியில் கேட்டுக் கொண்டதன் பேரில் வெளிவர உள்ள எனது “நினைவுச் சாரல்கள் “ கட்டுரை தொகுப்பிற்கு வாழ்த்துரையும் அளித்துள்ளார்......நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் அவரை சந்திக்கிறேன்..... முகநூலில் தினமும் பார்க்கும் முகம்..... தினம் தினம் அனைத்துத் துறைகளிலும் நடுநிலைமையான கருத்தை வெளியிடும் அவர் குணம்...... அவரை வெகுநாட்களுக்குப்பின் சந்திக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவில்லை..... ஆனால் மனதில் இரட்டிப்பு மகிழ்ச்சி....
அன்புச் சகோதரர் கணேஷ் பாலாவும் உடன் இணைந்தார்.....புத்தகக் கண்காட்சியை வலம்வர மிகச் சிறந்த புத்தகங்களே உடன் வருவதுபோல் உணர்வு .....
இடையில் பல நாட்கள் சந்திக்க வேண்டும் என்று நினைத்த அன்புச் சகோதரி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களை எதிர்பாராமல் சந்தித்தது..... எல்லையில்லா மகிழ்ச்சி.... பல பரபரப்பான சூழலிலும் என் “ நினைவுச் சாரல்கள் “ கட்டுரை தொகுப்பிற்கு மகுடமாய் சிறப்பான அணிந்துரை தந்தவர்... நன்றியையும் அன்பையும் நேரில் பரிமாறிக் கொண்டோம்.....

புத்தகக் கண்காட்சியை பெரிதாய் வலம் வந்தேனோ இல்லையோ .... பல முகநூல் நட்புக்களை எதிர்பாராமல் சந்திந்தது..... அவர்கள் என்னை அடையாளம் கண்டு அன்பை தெரிவித்தது நெகிழ்ச்சி....

இறுக்கமான சூழலால் இலேசான மூச்சுத் திணறல்..... நடந்ததால் சோர்வு...... வீட்டிலிருந்து அழைப்பும் வந்துக் கொண்டே இருக்க...புத்தக கிரிவலத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கும் தருணத்தில் ஒரு கைப்பேசி அழைப்பு ..... அட டா.... நட்பிற்கு இலக்கணமான நம்ம நல்லு சார்..... புத்தகக் கண்காட்சி கிரிவலம் அவரில்லாமல் முடியுமா என்ன...? உடன் கவிநல்லு , நம்ம லட்டுக் குட்டி.... அவர்களுடன் நண்பர் சுவடு மன்சூர் அறிமுகம்...... எல்லோருடனும் கும்பகோணம் காபி அருந்திவிட்டு....பிரியா விடைபெற்றுத் திரும்பினேன்...... மறக்கமுடியாத அழகான ஒரு மாலைப் பொழுதை எனக்குத் தந்த அத்தனை நட்பு வட்டங்களுக்கும் நன்றி!
“ துக்ளக்கில் ஜெயலலிதா” என்ற புத்தகத்தை எனக்கு பரிசாய் வழங்கிய மதிப்பிற்குரிய பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐

எழுதியவர் : வை.அமுதா (17-Jan-21, 2:19 pm)
பார்வை : 19

மேலே