அழகு மிளிர அசைந்து வந்தாள்

நளின நடையில் பளிங்கு நிறந்தாள்
அழகு மிளிர அசைந்து வந்தாள்
திசைகள் மாறி உதிக்கும் கதிராய்
களிப்பில் அறிவு மயங்கி நின்றேன்
அழகி அவளை அருகில் காண
அறக்க பறக்க ஊர்ந்துச் சென்றேன்
அருமை முகத்தில் தெரிந்த பொலிவில்
அசந்து நானும் வியந்து நின்றேன்
மயக்கும் கண்ணும் மாய விழியும்
எந்த பொருளையும் நீர்மமாக்கும்
அழகு நாசி அழகைக் கண்டால்
ஆண்வர்க்கங்களை அடிமையாக்கும்
சிவந்த வாயில் செழிப்புத் தன்மை
கனிந்த நெருப்பில் பழுத்த தங்கம்
பல்லால் ஆன அழகு வரிசை
தந்தத்தில் செய்த மணியைப்போல
கழுத்தும் தோளும் சேர்ந்த நிலையோ
கற்பனையில் நாம் காணும் காதல் போன்றே.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-Jan-21, 2:27 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 88

மேலே