பெருமைக்குரியவள்

கண்ணாலே ஈர்ப்பாள் கணிகையவ ளென்போம்
மண்பார்த்தே வந்தாலும் மாத்திமிரே என்போம்
பெண்ணென்றால் பேயென்றும் பேதையென்றும் சொல்லியே
பெருமைக்கு உரியாளைப் பேணாமல் விட்டோமே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jan-21, 1:38 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 149

மேலே