சங்கர்ராஜ் 20-ஜன-2021

பூ பூக்கும் வாசனை மாதம்
தை மாதம் பிறந்தவன்
நண்பன் சரா...
அவனது கருத்துக்கள்
வாசனை இல்லாமல் இரா...

மென்மையாய் இருப்பதில் வலியவன்...
மேன்மையாய் இருக்கத் தெரிந்தவன்...
வாய்மை பேசக் கூடியவன்...
பொய்மை புறந்தள்ளி வாழ்பவன்...
இவன் நம் இனிய நண்பன்...

கதிரவன் வடக்கு நோக்கிப்
பயணிக்கும் ஆறு மாதத்து
உத்தராயணக் காலம்
வானத்து தேவர்களுக்கு
அவர்களின் ஒருநாளின்
ஒரு பகல் பொழுதாம்...
அதனால்தான் என்னவோ
சரா எப்போதும்
விழிப்பாக இருக்கிறான்...
செழிப்பாக இருக்கிறான்...

சிந்தனையாளர்களின் சராசரி
சிந்தனைக் கடல் மட்டத்திலிருந்து
சராவின் சிந்தனை உயரம்
மிக உயர்ந்தது...
ஏற்றங்கள் பல கொண்டது...
அவனது இனிய உரையாடல்களில்
எல்லாம் இது தெரிகிறது...

சொலல்வல்லன் சோர்விலன்
அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது....
சங்கர்ராஜ் இதில் தங்கராஜ்...

சமூக நீதி... சமூக நல்லிணக்கம்
ஆண் பெண் சமநிலை
பகுத்தறிவுக் கொள்கைகள்
சமயோசிதம்... நகைச்சுவை...
கிரிக்கெட்டு வார்த்தை விளையாட்டு
இவை எல்லாம்
சராவிற்குச் சம்மதம்...
அதனால் இவனிருக்குமிடத்தில்
நிலைத்திருக்கும் சமாதானம்...

தையும் ஜனவரியும்
சேர்ந்திருக்கும் கோலாகல
நாட்கள் ஒன்றில் பிறந்திருக்கும்
நண்பன் சங்கர்ராஜ்
வசந்தங்கள் பாராட்ட
வானமும் வசப்பட
வாழ்க பல்லாண்டு
வளங்கள் எல்லாம் பெற்று...
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள் சங்கர்ராஜ்...
👏👍💐🙏😀🌺🎂❤🍫🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (21-Jan-21, 4:06 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 124

மேலே