தலைவா வீர வணக்கம்

ஜனவரி 23 -- இன்று வீர வரலாற்று நாயகன் நேதாஜி பிறந்த தினம்

உன் உதிரத்தை கொடு
உனக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிறேன்
என்று முழங்கினான்
தன் தாய் பூமியை விடுத்து அந்நிய மண் சென்று
ஆசாத் ஹிந்த் எனும் பெரும் படை திரட்டினான்
ஜப்பானிலிருந்து பர்மா எல்லை வரை வந்து
ஆங்கிலப் படையை அதிரத் தாக்கினான்
ஒரு விமான விபத்தில் வீர மரணம் அடைந்தான்
அவன் இருக்கிறான் இருக்கிறான் என்று எழுதிய கதைகள் எல்லாம்
சோம்பேறிகள் வரைந்த புனை வரலாறு
வங்க வேங்கை உயிருக்கு பயந்து பதுங்கி வாழ்ந்ததா !!!!!
யாருக்கடா வேண்டும் இந்த அபத்த வரலாறு ?
தலைவா உனக்கு வீரவணக்கம் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-21, 7:36 pm)
பார்வை : 308

மேலே