நிஜம் எங்கே

கதை சொல்லும் கவி
பருவங்கள் காலத்தில்
மறுக்கப்படாத நிஜங்கள்
மாற்றங்களில் நகரும் நேரங்கள்
அப்போ சிந்தனை சிற்பிப்போல்
மனிதனின் மனம்
பக்குவத்தின் போர்வையில்

கள்ளமற்ற வெள்ளை உள்ளங்களை
இன்றியமையாத பாசமொன்று
கொள்ளையிடப் பார்க்கிறது
அதுதான் காதலின் நோக்கு
திருடவரும் கள்வனைபோல் எண்ணங்கள்
பட்டாம் பூச்சியாக அன்றுவரை மனிதன்

பருவங்கள் மாறியதும் கூண்டுக்குள் கிளியாக
எண்ணங்கள் தனியென
ஏக்கமும் தாக்கமும் மிஞ்சும் அளவிற்கு
வாழ்வின் ஓர் பகுதி மாற்றத்தில்,
நிஜம் எங்கே புரியாத புதிராக...
புரிந்தவன் புறப்பட புதிர்கள் எதுவும்
புலப்படும் தெளிவாக

எழுதியவர் : பாத்திமாமலர் (24-Jan-21, 11:02 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : nijam engae
பார்வை : 135

மேலே