சிந்தனை கவிதை

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

*கவிதை*

படைப்ப *கவிதை ரசிகன்*

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

ஏழை சிறுவன்
கடையிலிருந்த
தின்பண்டங்களை
சாப்பிட்டான்
"பார்வையால்...."

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

மருத்துவராக
அரசு ஊழியராக
வழக்குரைஞராக
ஆசிரியராக
அரசியல்வாதியாக
ஆராய்ச்சியாளராக
வல்லுநர்களாக
பணக்கார்களாக வருவதற்கு எத்தனையோ பேருக்கு ஆசை
அது சரி
மனிதர்களாக வருவதற்கு
எத்தனை பேருக்கு ஆசை...?

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

அந்தப் பெண்ணின்
"கால் ஊனத்திற்கு" ஈடாக
ஸ்கூட்டர் கேட்கின்றவனே!
உன் "மன ஊனத்திற்கு"
ஈடாக
அந்தப் பெண
எதையாவது கேட்டால்
நீ எதைக் கொடுத்து
ஈடு செய்வாய்....?

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

காந்தியே!
நீ
"நோட்டில்"சிரித்தாலும்
நீ
பெற்றுத்தந்த சுதந்திரம்
இன்னும்
"ரோட்டிலேயே" அழுகின்றது...!

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡


"ஒரு குழந்தைக் கூட
இல்லையே" என்று
"ஒரு நூறு கோயிலுக்குச்
சென்றும்
ஒரு பயனுமில்லையே" என்று
வருந்தும் தம்பதிகளே!
பெற்றோர் இல்லாமல்
வருந்தும் குழந்தைகள்
எத்தனை எத்தனையோ!
பெற்றெடுத்தால் தான்
குழந்தையா...?
தத்தெடுத்தால்
அது என்ன குழவியா...?


*கவிதை ரசிகன்*

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

எழுதியவர் : கவிதை ரசிகன் (24-Jan-21, 7:42 pm)
Tanglish : sinthanai kavithai
பார்வை : 131

மேலே