என்னய்யா கூட்டம்

ஒரு கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தின்.முன் சுமார் ஐம்பது பேர்.அரட்டைச் சத்தம். தலைவர் உதவியாளரிடம்:
என்னய்யா கூட்டம். சத்தமா பேசற மாதிரி.கேக்குது..யாருடா அவுங்க?
@@@@@@@
அய்யா, நம்ம கட்சில ரவுடிங்களச் சேத்துக்கற தகவலை அறிஞ்சு சுமார் ஐம்பது ரவுடிங்க தனி பஸ் பிடிச்சு வந்திருக்கறாங்க.
@@@@@@@@@
நல்ல தகவல்டா சுரேஷ். சரி. அவுங்களுக்கு துண்டு போத்தி நம்ம கச்சில சேர்க்கணும்..வேண்டிய அளவு துண்டுகளையும் சிக்கன் பிரியாணி பொட்டலங்களையும் ஏற்பாடு செய். பஸ் வாடகை, ஆளுக்கு ஆயிரம் நிதி ஆலோசகர் மூலமா வாங்கி வை. நம்ம வெற்றி நாளுக்கு நாள் பிரகாசமா தெரிதடா சுரேஷ்.
@@@@@@@@@
அய்யா நீங்க தான் அடுத்த முதல்வர். வாழ்க..

எழுதியவர் : அன்பு (24-Jan-21, 8:09 pm)
சேர்த்தது : மலர்1991 -
Tanglish : yennayya koottam
பார்வை : 172

மேலே