மொழிமௌனம் உன்விழிபேசும்
விழியால் மொழிபேசும் கம்பன் காவியமே
பொழியும் பனியுடன் புலரும் மார்கழியே
அழியாத தமிழ்கொஞ்சும் செவ்விதழ் சித்திரமே
மொழியால்மௌ னம்விழியால் பேசும் மலர்மன்றமே
-----இது கலிவிருத்தம்
விழியால் மொழிபேசும் கம்பன் தமிழே
பொழியும் பனியில் புலரும் பொழுதே
அழியாத் தமிழ்கொஞ்சும் செவ்விதழ்ப்பே ழையே
மொழிமௌனம் உன்விழிபே சும் !
----இது ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக
விழியால் மொழிபேசும் கம்பன் தமிழே
பொழியும் பனியின் குளிரே-- அழியா
எழில்தமிழ் கொஞ்சிடும் செவ்விதழ்ப்பே ழையே
மொழிமௌனம் உன்விழிபே சும் !
---இப்பொழுது நேரிசை வெண்பாவாக