நான் ரசித்த கண்ணதாசனின் காதல் சோகப்பாடல்
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனம் நான் என்ன செய்வேன் ..என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும் (இரண்டு மனம் ...)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே ( இரண்டு மனம் )
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி.....
கடவுளைத் தண்டிக்க என்ன வழி ...?
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
இறைவனிடம் கேட்பேன் .....
கடவுளைத் தண்டிக்க என்ன வழி ----என்றெல்லாம் கவிதையில்
கண்ணதாசனால் மட்டுமே எழுதமுடியும் . இந்த வரியை பாடும் போது
படத்தில் அண்ணன் சிவாஜியின் action pose இரண்டும் classic !
பொருளும் காதல் சோகமும் ததும்பி வழியும் கவிதைக்கிண்ணம்
இந்தப் பாடல் .
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்
-----இந்த வரிகளை கவனியுங்கள்
கே வி மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதி TMS பாடிய
அற்புதமான காதல் சோகப்பாடல் .படம் வசந்த மாளிகை .
யு ட்யூபில் கிடைக்கும் கேட்டுப்பாருங்கள்
படம் : வசந்த மாளிகை திரைப்படத்தில் ஒரு காட்சி