காதல் கடிதம்

உலகில் சில காதலர்கள்
தங்கள் காதலை
கண்களாலும்
கடிதம் எழுதியும்
வெளிப்படுத்தி
வெற்றி பெறுகிறார்கள் ...!!

சிலர் தங்கள் காதலை
வெளிப்படுத்தி ஏமாந்து
தோல்வி அடைந்து
வாழ்கிறார்கள் ...!!

சிலர் தங்கள் காதலை
வெளிப்படுத்தாமல்
மனதிலேயே
காதல் கடிதம் எழுதி
அதனை மறைத்து,
உணர்வுகளை ஊனமாக்கி
வாழ்கிறார்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Jan-21, 7:19 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal kaditham
பார்வை : 300

மேலே