நம்பிக்கைப் பிடி
விசையற்றக் காற்றால் வீழும் காற்றாடி போல....
ஆடி ஆடி அந்தரத்தில் மிதக்கிறது
சோர்வுற்ற மனது....
நம்பிக்கைப் பிடியில் மறுமுனை நுனி....
தளராது காத்திருந்து
தட்டி தூக்குகையில்...
விண்ணோக்கி விர் என்று எழும்பி...
மேகத்தை உரசியபடி ....
இலகுவாய் ஆனந்தத்தில்
மிதக்கிறது...
அதோ....அதோ...
வெற்றி இலக்கை அடைய
வெகுதூரம் இல்லை.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
