ஹைக்கூ
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
மரங்களை வெட்டி
யாகம் நடத்துகின்றனர்
மழைவேண்டி
🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢
காக்கையின் எச்சம்
கௌரவம் பெறுகிறது
காந்தி சிலை மீது
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
லஞ்சம் ஒழிப்பு அதிகாரியாக
வேலையில் சேர்ந்தார்
லஞ்சம் கொடுத்து
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
குழந்தையைப் பற்றி
நன்றாக அறிந்திருந்தாள்
குழந்தை இல்லாதவள்
🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣
சிறகு முளைத்த
இரு மீன்கள்
அவள் கண்கள்
*கவிதை ரசிகன்*
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️